வருங்கால கணவர் உங்களுக்கு பொருத்தமானவரா?
‘திருமணம் ஆயிரங் காலத்துப் பயிர்’ என்று பெரியோர்கள் சொன்னதை நிரூபிக்க, தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும்.
(திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யவேண்டிய சுயபரிசோதனை)
‘திருமணம் ஆயிரங் காலத்துப் பயிர்’ என்று பெரியோர்கள் சொன்னதை நிரூபிக்க, தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு மனமும், உடலும் ஒத்துழைக்க, பொருத்தமான ஜோடியை தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு, சம்பிரதாயமாக தலையாட்டி சம்மதம் தெரிவித்துவிட்டு, திருமணத்திற்குப் பின்னால் பொருந்தா ஜோடிகளாக வருந்தி வாழக்கூடாது.
உங்களுக்காக பேசி முடிக்கப்பட்டிருக்கும் வரன், உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவராக இருப்பாரா என்பதை அரிய இந்த பரிசோதனை முயற்சி உதவும்.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்களே இந்த பரிசோதனைக்கு ரெடியாகுங்கள். கீழ்கண்ட ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படியுங்கள்!
1. எல்லா விஷயத்திலும் என் வருங்கால கணவருக்கு நான் ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்துவிட்டேன்!
2. நான் திருமணத்திற்கு சம்மதிப்பதால் எனக்கு மதிப்பும், மகிழ்ச்சியுமே அதிகரித்திருக் கிறது. கூடுதல் சுமை ஏற்படும் என்று கருதவில்லை!
3. எனது கனவுகள், ஆசைகள் நிறைவேறும் என்பதால்தான் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன்!
4. எங்கள் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நான் மனக்கண்ணில் காண்கிறேன்!
5. என்னைவிட எனது துணைவரின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம்!
6. எனது வருங்கால கணவர் மிகச்சிறந்த மனிதர் என்று நம்புகிறேன்!
7. அவர் எடுக்கும் எல்லா முடிவுகளிலும் என் நலனுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று கருதுகிறேன்!
8. சரியான நபரை துணையாக தேர்வு செய்திருப்பதாக என் மனது பூரிக்கிறது!
9. இனி அவர்தான் என் வாழ்க்கையில் எல்லா முமாக இருப்பார்!
10. ஒருவேளை என் துணையை பிரிய நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன்!
11. சம்மதம் தெரிவித்துவிட்டு, யோசனையில் மூழ்கி உள்ளேன்...
12. அவரது நிபந்தனைகளால் எனது சுதந்திரத்தையும், என் அடையாளத்தையும் இழந்துவிடுவேனோ என்ற அச்சம் வருகிறது!
13. கணவர் என் மீது (பொறுப்புகளை சுமத்தி) சவாரி செய்யும் நிலையில் இருக்கிறார் எனத் தோன்றுகிறது!
14. என் குடும்பத்தினர், தோழிகள் உதவி கேட்டால், கணவரைவிட அவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பேன்!
15. நான் பழைய மாதிரி இல்லை. என் வாழ்க்கை இப்போது ஏனோ பரபரப்பாக ஆகிவிட்டதுபோல் உணர்கிறேன்!
16. இவரைவிட சிறந்த வரனுக்காக காத்திருக்கலாம் என்று மனம் சொல்கிறது!
17. கணவரை தேர்வு செய்ததில் தவறு நடந்து விட்டதுபோல் உணர்கிறேன்!
18. அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில சமயங்களில் என் மனதை புண்படுத்துவதாக தெரிகிறது!
19. என் துணைவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப என்னால் வாழ முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறது!
20. எங்கள் உறவு தொடர்ந்து நீடிக்குமா, ஒருவேளை பிரிவு ஏற்பட்டால் என் நிலைமை என்னவாகும் என்ற கவலை ஏற்படுகிறது!
மேற்கண்ட 20 கருத்துக்களுக்கும் ஆம்! இல்லை!! என்ற இரண்டு விதமான பதில்கள் உண்டு. அதில் உங்கள் பதில் எது என்பதை குறியுங்கள்.
இனி உங்கள் மனநிலையை அறிய மதிப்பெண் இட வேண்டும். 1 முதல் 10 வரையுள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதிலுக்கு 10 மதிப்பெண் களும், 11 முதல் 20 வரை உள்ள கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலுக்கு 10 மதிப்பெண்களும் வழங்குங்கள்.
அதேபோல முதல் 10 கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதிலுக்கு 5 மதிப்பெண்களும், 11 முதல் 20 வரை உள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதிலுக்கு 5 மதிப்பெண்களும் வழங்குங்கள்.
இப்போது உங்கள் மதிப்பெண்களை கூட்டுங்கள். மொத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப உங்கள் மன நிலையையும், திருமணத்திற்கான தயார் நிலையையும் கீழே அறிந்து கொள்ளுங்கள்.
விடை: 105 மதிப்பெண்களுக்குள்
பொருத்தமற்ற துணைவரை சந்தித்திருக்கிறீர் கள். கட்டுப்பாடுகள் காரணமாகவோ, சொல்ல முடியாத சூழலாலோ அவருக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டாம். அவருடன் உங்களுக்கு மனப் பொருத்தம் ஏற்படவில்லை. தங்கள் மகள் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று எண்ணித்தான் பெற்றோர் உங்களுக்கு அந்த வரனை முடிவு செய்திருப்பார்கள். அவர்கள் முடிவும் தவறாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. அதனால் பொருத்தமற்ற துணைவரைப் பற்றி பெற்றோரிடம் ஒருமுறை பேசிப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பொருத்தமான வேறு வரனை தேட வாய்ப்பிருக்கிறது. தேவைப்பட்டால் உங்களுக்கு பார்த்திருக்கும் வரனிடமும் பக்குவமாக நீங்கள் பேசிப்பார்க்கலாம். உங்கள் கவலையை வெளிப்படுத்தலாம்.
விடை: 110 முதல் 170 மதிப்பெண்
உங்கள் ஜோடிப் பொருத்தம் பரவாயில்லை ரகம். தகுதி, அந்தஸ்து என பல விஷயங்களில் உங்களுக்குள் ஓரளவுக்கு ஒத்துப் போகிறது. மன ஒற்றுமையே வாழ்க்கைக்கு மிக அவசியம். இருவரும் இன்னும் கலந்தாலோசிக்க வேண்டிய விஷயங்கள் இருந்தால் அவற்றை பற்றி நேரடியாக மனம்விட்டுப் பேசிப் பாருங்கள். கனவுகளையும், ஆசைகளையும் விளக்கிக் கூறுங்கள். கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் முட்டுக்கட்டையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் இணைந்தால், சந்தோஷமும், முன்னேற்றமும் பெருகும் என்றால், திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டலாம். இல்லாவிட்டால் இன்னும் சிறந்த வரனைத் தேடலாம்.
விடை: 175 முதல் 200 மதிப்பெண்
சரியான ஜோடியை சந்தித்திருக்கிறீர்கள். இரு இதயங்களும் இணக்கமாக இருக்கின்றன. எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசி, சுமுகமான முடிவுக்கு வருவதுடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் தெளிவும், தன்னம்பிக்கையும் உங்கள் உள்ளங்களில் ஊற்றெடுக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக திருமண பந்தத்தில் இணையலாம். வாழ்த்துக்கள்!

Related Tags :
Next Story