நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு 7–ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு 7–ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2017 2:30 AM IST (Updated: 1 July 2017 6:57 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு 7–ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனுகொடுத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு 7–ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனுகொடுத்துள்ளனர்.

கலெக்டரிடம் மனு

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

திருநெல்வேலி என்று பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லையப்பர்–காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்திருவிழா கடந்த 29–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் நெல்லை மற்றும் தென் மாவட்ட மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள்.

மாவட்டம் முழுவதும் விடுமுறை

இந்த தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம் ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தாலுகா அளவில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைவரும் தேரோட்டத்தில் பங்கேற்கும் வகையில், வருகிற 7–ந்தேதி தேரோட்டம் அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story