வியாபாரி கொலை வழக்கில் 4 பேர் கைது


வியாபாரி கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 July 2017 3:45 AM IST (Updated: 2 July 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீஞ்சூர்,

சோழவரத்தை அடுத்த அத்திப்பேடு, ஜி.என்.டி சாலையில் வசித்து வந்தவர் முரளி கிருஷ்ணன். இவர் ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை அருகே எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பார்வதி தேவி. கடந்த 29–ந் தேதி இரவு கணவன், மனைவி இருவரும் கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். அத்திப்பேடு அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பலால் முரளி கிருஷ்ணன் வெட்டி கொல்லப்பட்டார்.

இது குறித்து சோழவரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக அத்திப்பேடு காலனியை சேர்ந்த உதயகுமார் (20), சண்முக கனி (21), முத்தரசன் (21), முருகன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story