முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் பிரபல ரவுடிகள் போலீசார் விசாரணை
ஓசூரில் முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்டு பிரபல ரவுடிகள் மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ரவுடிகள் அட்டகாசம் நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாது என்று கூறும் அளவிற்கு ரவுடிகளின் அட்டகாசம் இருந்தது. குறிப்பாக பணி முடிந்து இரவு நேரங்களில் வீடுகளுக்கு திரும்புபவர்களை மிரட்டி பணம் பறிக்க கூடிய ரவுடி கும்பல் இருந்தது.
இந்த ரவுடி கும்பல் பின்னர், ஆட்களை கடத்தி அவர்களின் குடும்பத்தை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு ஓசூரில் பணம் கேட்டு அதிகம் பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். பணம் கொடுக்கவில்லை என 5 பேர் கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குற்றங்கள் குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் ரவுடிகள் சிலர் அட்டகாசத்தை தொடங்கி உள்ளனர். குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ரூ.10 லட்சம் வரையில் அவர்கள் கேட்டு வருவதாக போலீசாருக்கு தகவல்கள் சென்றுள்ளன. பிரபல ரவுடி ஒருவர், ஓசூர் டவுனில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று பணம் கேட்டு மிரட்டி வருகிறார்.
ஓசூரில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், சமீபத்தில் ஜாமீனில் வந்த ரவுடி ஒருவர், தனது கூட்டாளிகளை வைத்துக் கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
கைது செய்ய நடவடிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-
ஓசூரில் கடந்த ஒரு ஆண்டாக குற்றங்கள் குறைந்து அமைதியாக இருக்கிறது. இந்த நிலையில் ரவுடிகள் சிலர் ஆட்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜாமீனில் வெளியே வந்துள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். மேலும் பழைய ரவுடிகளின் கீழ் இயங்க கூடிய நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் குற்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story