எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 July 2017 4:00 AM IST (Updated: 2 July 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் நேற்று எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சுத்தாங்காத்து சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சேவை துறைக்கு ஜி.எஸ்.டி. யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பாலிசியின் கீழ் வழங்கப்படும் கடன் வட்டியை குறைத்திட வேண் டும். பாலிசிக்கான போனசை அதிகப்படுத்த வேண்டும். முகவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோட்ட பொருளாளர் ஸ்ரீதரன் உள்பட முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் விஜய குமார் நன்றி கூறினார். 

Next Story