வையம்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி
வையம்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலியானது.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வலையப்பட்டி பகுதி மக்கள் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வீரப்பன்-கயல்விழி தம்பதியினரின் 7 மாத குழந்தை தயாளன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். பின்னர் அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.
இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி தயாளன் பரிதாபமாக உயிரிழந்தான்.
குழந்தை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், வலையப்பட்டி பகுதியில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக மர்ம காய்ச்சலால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் நேரில் வந்து கிராமத்தில் உள்ள குடிநீரை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். அதன் பின்னர் வரவில்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராமத்தை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விடுவோம் என்றனர்.

Related Tags :
Next Story