பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி  எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 July 2017 4:15 AM IST (Updated: 2 July 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நடந்தது

திருச்சி,

இந்தியா முழுவதும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் எல்.ஐ.சி. பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய கோரி தஞ்சை கோட்ட எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பினர் நேற்று காலை திருச்சி ஒத்தக்கடை எல்.ஐ.சி. தொழில் முகவர் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் கமலகண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை கோட்ட எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், தென்மண்டல செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் உள்பட திருச்சி மாநகர, புறநகரில் உள்ள எல்.ஐ.சி. முகவர்கள் கிளைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை கோட்ட எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சீனிவாசன் வரவேற்றார். முடிவில் திருச்சி எல்.ஐ.சி. தொழில் முகவர் கிளையின் செயலாளர் குமாரசாமி நன்றி கூறினார். 

Next Story