குப்பை கிடங்கில் தீயை அணைக்க 4-வது நாளாக போராட்டம் பொதுமக்கள் கடும் அவதி

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 4-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் பரவியதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் மாநகரத்துக்குட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நாளொன்றுக்கு 400 டன் அளவுக்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கிடங்கில் கடந்த 28-ந் தேதி திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மள,மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தீயை அணைக்க 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.
அரியமங்கலம் குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் குப்பை கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் பரவியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். புகை மூட்டத்தால் கண் எரிச்சல், துர்நாற்றம் வீசுவதோடு, மூச்சு திணறலும் ஏற்படுகிறது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து கொண்டு சென்று வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளுடன் வெளியேறி மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
நேற்றும் 4-வது நாளாக குப்பை கிடங்கில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்களும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை கிளறி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவுவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.
மழை பெய்தால் மட்டுமே குப்பை கிடங்கில் பற்றிய தீயை முழுவதுமாக அணைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் தொடர்ந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story