மசாஜ் பார்லரில் விபசாரம் 5 வெளிநாட்டு பெண்கள் மீட்பு


மசாஜ் பார்லரில் விபசாரம் 5 வெளிநாட்டு பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 2 July 2017 2:39 AM IST (Updated: 2 July 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

புனே, சதுஸ்சுருங்கி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புனே,

புனே, சதுஸ்சுருங்கி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் பார்லருக்கு போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மசாஜ் பார்லருக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 5 தாய்லாந்து நாட்டு பெண்கள் மற்றும் ஒரு இந்திய பெண்ணை மீட்டனர். மேலும் மசாஜ் பார்லர் உரிமையாளர் அங்கித்(வயது25), மும்பை பாந்திராவை சேர்ந்த இம்ரான்(41) மற்றும் ஊழியர் சந்திரசிங்(27) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story