விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதியுதவி பெற அரசு புதிய வங்கிக்கணக்கு


விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதியுதவி பெற அரசு புதிய வங்கிக்கணக்கு
x
தினத்தந்தி 2 July 2017 2:53 AM IST (Updated: 2 July 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதியுதவி பெற அரசு புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளது.

மும்பை,

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதியுதவி பெற அரசு புதிய வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளது.

விவசாயிகளின் கடும் போராட்டத்தால் ஏற்பட்ட நேருக்கடி நிலையை அடுத்து பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு ரூ.34 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தது.

இருப்பினும் இந்த கடன் தள்ளுபடியால் அரசு நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டுவர 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகலாம் எனவும் சமீபத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நெருக்கடி நிலையில் சமாளிக்க அரசு பல்வேறு துறைகளில் பயன்படுத்தாமல் உள்ள நிதிகளை பயன்படுத்தவும், வீண் செலவுகளை முடிந்தவரை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் பல்வேறு மாற்று வழிகளையும் அரசு சிந்தித்து வந்தது. இதன்படி பொதுமக்களிடம் இருந்து இதற்கு நிதியுதவி பெற முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு சார்பில் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேன் வங்கியில் ‘‘முதல்–மந்திரி விவசாயிகள் நிவாரண நிதி’’ என்ற பெயரில் இந்த கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கின் எண் 36977044087 ஆகும். இந்த வங்கிகணக்கில் நிதி உதவி வெறும் வரைவு காசோலையாக மட்டுமே பெறப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1 More update

Next Story