சென்னை ராயப்பேட்டையில் திருமணம் ஆன 3 மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை ராயப்பேட்டையில் திருமணம் ஆன 3 மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கலைவாணி(வயது 32).

சென்னை,

இவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் வந்த ஜாம்பஜார் போலீசார் கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த கலைவாணியின் தந்தை கணேசன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீசாரிடம் புகார் அளித்தார்.

கணேசனின் புகாரின் பேரில் போலீசார் கலைவாணியின் கணவர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணனுக்கும், கலைவாணிக்கும் திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆகியுள்ளதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story