முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு 7,527 பேர் எழுதினார்கள்


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு 7,527 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து போட்டி தேர்வை 7 ஆயிரத்து 527 பேர் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி,

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து போட்டி தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளந்தா மெட்ரிக் பள்ளி, கே.ஆர்.பி. அணை அரசு பள்ளி, குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா பள்ளி, ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, எலத்தகிரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரிய பனமுட்லு எ.இ.எஸ். மேல்நிலைப்பள்ளி, அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலை உள்பட மொத்தம் 21 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத மொத்தம் 8 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 527 பேர் தேர்வு எழுதினார்கள். 589 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு மையங்களுக்கு பஸ் வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.ஆர்.பி. அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தனி துணை கலெக்டர் வசந்தா, கிருஷ்ணகிரி தாசில்தார் மோகனசுந்தரம், பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story