காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு


காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 July 2017 4:30 AM IST (Updated: 3 July 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

நெல்லை,

காங்கிரஸ் கட்சி சார்பில் உறுப்பினர்களை சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களையும், அட்டைகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் அதிகமாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வீடு, வீடாக சென்று காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும். வருகிற 15–ந் தேதி காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்’’ என்றார்.

நிர்வாகிகள்

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வானமாமலை, முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர்கள் சுந்தர்ராஜ பெருமாள், உமாபதி சிவன், துணைத்தலைவர் வாகை கணேசன், இளைஞர் காங்கிரஸ் தருவை காமராஜ், நிர்வாகிகள் உதயகுமார், காவேரி, விஜயன், மகளிர் அணி மாரியம்மாள், உறுப்பினர் சேர்க்கை மண்டல பொறுப்பாளர்கள் மாரியப்பன், அய்யப்பன், கார்த்திக், சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story