புனித சவேரியார் பேராலயத்தில் முதல் திருப்பலி புதிய ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றினார்
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புதிய ஆயர் நசரேன் சூசை முதல் நன்றி திருப்பலி நிறைவேற்றினார்.
நாகர்கோவில்,
கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய பீட்டர் ரெமிஜியுஸ் ஓய்வு பெற்றார். இதையடுத்து 6–வது ஆயராக நசரேன் சூசை கடந்த 29–ந் தேதி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள ஆயர் இல்ல வளாகத்தில் பொறுப்பேற்றார். அவரை ஆயராக, முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் திருநிலைப்படுத்தினார்.
கோட்டார் மறை மாவட்ட புதிய ஆயராக நசரேன் சூசை பொறுப்பேற்ற பிறகு, முதன் முதலாக அவர் தனது பணியை தொடங்கும் விதமாக நேற்று காலை 7 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு நன்றி திருப்பலி நிறைவேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதற்காக வருகை தந்தை ஆயர் நசரேன் சூசைக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலய சந்திப்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேராலய பங்குத்தந்தை குணபால் ஆராச்சி உள்ளிட்ட அருட்பணியாளர்களும், பங்குப் பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் என ஏராளமானோர் பொன்னாடை அணிவித்து புதிய ஆயரை வரவேற்றனர். பின்னர் மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடியபடி முன்செல்ல ஆயர் நசரேன் சூசை ஆலய வளாகத்தில் திருப்பலி மேடை அமைக்கப்பட்டு இருந்த கலையரங்கத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். திருப்பலி மேடை அருகே சென்றதும் மங்கல ஆரத்தி எடுத்து ஆயர் வரவேற்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கூட்டுத்திருப்பலி தொடங்கியது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். இதில் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சாலமன், ஆயர் செயலாளர் அருட்பணி குரூஸ் கார்மல், கோட்டார் மறைவட்ட முதல்வர் அருட்பணி மைக்கேல் ஏஞ்சல், பங்குத்தந்தை குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆனந்த், அருட்பணி ஆஞ்சலோஸ் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினர்.
கோட்டார் சவேரியார் பேராலயத்துக்கு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஆயர் வருகை தந்ததையொட்டி திருப்பலி நிறைவடைந்ததும் பங்கேற்ற இறைமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்பலி முடிந்ததும் பேராலய பங்குப்பேரவை நிர்வாகிகள், தெற்கூர், வடக்குர் நிர்வாகிகள், பக்த சபைகளைச் சேர்ந்தவர்கள், அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து நடத்திய புதிய ஆயருக்கான வரவேற்பு கூட்டம் நடந்தது.

Related Tags :
Next Story