சரக்கு, சேவை வரி அமல்: குமரி மாவட்ட மக்கள் கருத்து
கடந்த 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
நாகர்கோவில்,
மளிகைப்பொருட்களைப் பொறுத்தவரையில் சீனி, வத்தல், மல்லி, கடுகு, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம், உலர்திராட்சை, முந்திரிபருப்பு, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றுக்கு 5 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி, பருப்பு, தானிய வகைகள், கரும்பு வெல்லம், புண்ணாக்கு, மாட்டுத்தீவனம் போன்றவற்றுக்கு வரி கிடையாது. மளிகை மொத்த வியாபாரிகள் கடையில் வேலைபார்க்கும் தினக்கூலி வேலையாட்களுக்கு கொடுக்கும் சம்பளத்துக்கு 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரித்தொகையை, பொருட்கள் விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தில் செலுத்த வேண்டிய 5 சதவீத வரியில் கழித்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்கள். சரக்கு, சேவை வரி செலுத்தக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யாத வியாபாரிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.
மேலும் சில்லறை வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்பவர்களுக்கு சரக்கு, சேவை வரி கிடையாது என்று கூறியிருக்கிறார்கள். இந்த தொகையை ரூ.75 லட்சமாக உயர்த்த வேண்டும். வியாபாரிகள் வங்கியில் செலுத்தும் பணத்துக்கும் வங்கி சார்பில் கட்டணம் பெறுகிறார்கள். சரக்கு, சேவை வரியை அமல்படுத்தும்போது இதுபோன்ற பலமுனை வரிகள் இருக்கக்கூடாது. கடை வாடகை மற்றும் பிற செலவுகளுக்கும் 18 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சீனி, பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வகைகள் போன்ற உணவுப்பொருட்களுக்கு வரியை நீக்க வேண்டும். பதிவு செய்த “பிராண்டட்“ உணவுப்பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுக்கும் 5 சதவீத சரக்கு, சேவை வரி விதித்திருக்கிறார்கள். இதனால் சுத்தமான, சுகாதாரமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். மேலும் வியாபாரிகளுக்கு சரக்கு, சேவை சரி தொடர்பாக பல சந்தேகங்கள் உள்ளன. அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை. எனவே 3 மாதங்களுக்கு வாரம் ஒருமுறை சரக்கு, சேவை வரி சம்பந்தமான விளக்க கூட்டம் நடத்தி, வியாபாரிகளின் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும். உணவுப்பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களுக்கு 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை 5 சதவீதமாக குறைத்தால் இந்த சரக்கு, சேவை வரி வரவேற்கத்தக்கதாக இருக்கும். நாடு முழுவதும் ஒரே வரியாக இருப்பதால் நேர்மையாகவும், முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கும்.
இவ்வாறு ஞானகுமார் சுரேஷ் கூறினார்.
அனைவருக்கும் ஏற்றது
நாகர்கோவில் செந்தூரான்நகர் பகுதியைச்சேர்ந்த ஆசிரியை பத்மா கூறியதாவது:–
என்னைப் பொறுத்தவரை அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஜி.எஸ்.டி. வரி திட்டம் நல்லதுதான் என்று கூறுவேன். எனவே நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பாக சரக்கு, சேவை வரி இருப்பதால் அனைவருக்கும் ஏற்றதுதான்.
ஒரு பொருள் இந்த வரிவிதிப்பால் உயர்ந்தது என்றால் இன்னொரு பொருளின் விலை குறைகிறது. எனவே மளிகைப்பொருட்களின் விலை கொஞ்சம் உயர்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நாட்டின் வளர்ச்சியைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஜி.எஸ்.டி. வரி சம்பந்தமாக பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. எனவே ஆதார் அடையாள அட்டைத் திட்டம், பிரதமர் மோடி தொடங்கிய வங்கி கணக்குத் திட்டம் போன்றவற்றுக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதைப் போன்று இந்த வரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுவாக பார்க்கும்போது இது நல்ல திட்டம்தான். உடனே அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு சரியாக தெரியவில்லை. கொஞ்சநாள் போனால் சரியாகிவிடும்.
இவ்வாறு பத்மா கூறினார்.
வரவேற்கத்தக்கது
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நகைப்பட்டறை நடத்தி வரும் செந்தில் கூறியதாவது:–
ஜி.எஸ்.டி. வரியால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏராளமான நன்மைகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்திருப்பதால் ஏழை, எளிய மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. வியாபாரிகளும் ஏமாற்ற முடியாது. அதேநேரத்தில் தற்போது ஏழை, எளிய மக்களும் பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டருக்கு 5 சதவீத வரி விதித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாக விதித்திருப்பதில் எந்த தவறும் இல்லை. ஏழை, எளிய மக்களை பொறுத்த வரையில் இந்த புதிய வரித்திட்டம் நல்ல திட்டம்தான். எனவே வரவேற்கக்கூடிய திட்டமாகத்தான் இந்த திட்டம் உள்ளது.
இவ்வாறு செந்தில் கூறினார்.
பாதிப்பு இல்லை
மார்த்தாண்டம் நகை வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:–
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. வரியை பொறுத்தவரையில் நகை வியாபாரிகளாகிய நாங்கள் வரவேற்கக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே 1 சதவீத வரி செலுத்திக்கொண்டிருந்தோம். அது இப்போது ஜி.எஸ்.டி. வரியின் மூலமாக 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகை வியாபாரிகளாகிய நாங்கள் ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக அதிகரிக்குமோ? என எதிர்பார்த்தோம். ஆனால் 3 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு இல்லை.
ஆனால் திருமணம், சேமிப்பு போன்றவற்றுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்கும்போது மக்கள் சற்று பாதிப்புக்கு உள்ளாகத்தான் செய்கிறார்கள். ஆனால் 5 சதவீதத்துக்கு குறைவாக 3 சதவீதம் என்று வரும்போது அந்த பாதிப்பை பொதுமக்கள் ஏற்க வேண்டியதாகவே உள்ளது.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
கல்வி உபகரணம்
கேரளபுரம் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சுலேகா கூறியதாவது:–
தற்போது கடினமாக இருந்தாலும் பிற்காலத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை பயன்தரும். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரவில்லை. பலமுனை வரிகள் மாற்றப்பட்டு, ஒரே வரிமுறைதான் சிறந்தது. விலை உயர்வைவிட, விலை குறைந்த பொருட்கள் ஏராளம். பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்கள், ஓட்டல் உணவகங்களில் விலை உயர்வு காணப்படுகிறது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் போன்ற பொருட்களுக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்திருக்கலாம். 500 ரூபாய்க்கு மேல் உள்ள செருப்பு, ஆயிரம் ரூபாய்க்கு மேலான ஆடைகளுக்கு வரிவிதிப்பு சரியே. இது ஏழைகளை பாதிக்காது. அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து ஆடம்பர பொருட்களுக்கு வரி உயர்ந்துள்ளது. கல்விக்கு வரி விதிக்காதது, உயர்கல்வி சீராக வழிவகுக்கும். கல்வி உபகரணங்கள் விலை குறையும்.
இவ்வாறு சுலேகா கூறினார்.

Related Tags :
Next Story