ராணுவ நர்சிங் சேவை பணிகளுக்கு ஆள்சேர்க்கை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்


ராணுவ நர்சிங் சேவை பணிகளுக்கு ஆள்சேர்க்கை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
x
தினத்தந்தி 3 July 2017 7:30 PM IST (Updated: 3 July 2017 12:05 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் நர்சிங் சேவைப் பணிகளுக்கு இளம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார் கள். தற்போது மிலிட்டரி நர்சிங் சேவை (எம்.என்.எஸ்.) பணிகளுக்காக தகுதியான இளம் பெண்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஷாட் சர்வீஸ் கமிஷன் பிரிவின் கீழ் வரும் அதிகாரி தரத்திலான பணியிடங்களாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை இனி அறிவோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 10-6-1982 மற்றும் 11-7-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி:

எம்.எஸ்சி. நர்சிங், பீ.பி.பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் போன்ற நர்சிங் படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இவர்கள் நர்ஸ் - மிட்வைப்களுக்கான நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிந்து வைத்திருக்க வேண்டும்.

தேர்வுசெய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி நியமனம் பெறும்போது லெப்டினன்ட் தரத்திலான அதிகாரியாக பொறுப்பேற்கலாம், 3 ஆண்டுகளில் கேப்டனாகவும், 8 ஆண்டுகளில் மேஜர் தரத்திலான பதவி உயர்வு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11-7-2017-ந் தேதி யாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.


Next Story