இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 4 July 2017 2:15 AM IST (Updated: 3 July 2017 8:49 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசந்திரன், நகர தலைவர் ராஜேஷ், நகர செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கிறிஸ்தவ மாணவர்களுக்கும், முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதை போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். சந்தவாசல் கிராமத்தில் உள்ள வண்ணார்குட்டை குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story