தி.மு.க. சார்பில் தூர்வாரப்படும் ஏரி, குளங்கள் குறித்து ஆய்வு கூட்டம்


தி.மு.க. சார்பில் தூர்வாரப்படும் ஏரி, குளங்கள் குறித்து ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 4 July 2017 2:00 AM IST (Updated: 3 July 2017 8:49 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில், திருவண்ணாமலையில் 18 ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை,

தி.மு.க. சார்பில், திருவண்ணாமலையில் 18 ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நீர் வழிப்பாதைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story