மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ஊத்தங்கரை அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காட்டேரி ஊராட்சி ஒன்னகரையைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கதிரவனை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊத்தங்கரை தாலுகா காட்டேரி ஊராட்சி காட்டேரி மற்றும் வெப்பாலம்பட்டி ஒன்னகரை கிராமத்திற்கு மத்தியில் உள்ள தனியார் நிலத்தில் சேலம் மெயின் ரோடு அருகில் அரசு மதுக்கடை வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள், நில உரிமையாளரிடம் கடையை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியும், கடை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மதுக்கடை அமைந்தால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிக்கும். திருட்டு போன்ற குற்ற செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. மேலும் மது குடிக்க வருபவர்கள் தகராறு செய்து சாதி ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி சட்டம் - ஒழுங்கு பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே எங்கள் கிராம மக்களின் நலன் கருதி இந்த பகுதியில் மதுக்கடை அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story