குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொது மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
நாங்குநேரி தாலுகா ராமகிருஷ்ணாபுரம் தினையூரனி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர். அதில் தினையூரனி கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 4 மாதங்களாக குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். 20 நாட்களுக்கு ஒரு முறை 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. எனவே அன்றாட அவசிய தேவைக்கு தண்ணீர் எடுக்கும் வகையில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, சிறிய தண்ணீர் தொட்டி வசதி செய்து தர வேண்டும்.
இதேபோல் நெல்லை அருகே உள்ள தாழையூத்து பஞ்சாயத்து கீழ தென்கலம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். ‘‘எங்கள் பகுதியில் 2 பொது அடிபம்புகள் உள்ளன. பழுதடைந்து உள்ள பம்புகளை சரிசெய்து தருமாறு மானூர் யூனியன் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அடிபம்புகளை சரி செய்து, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றுமாறு போலீசார் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மேலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது வழக்குகளும் போட்டுள்ளனர். ஒலி மாசை கட்டுப்படுத்தும் முறை குறித்து சரியான வழிகாட்டுதலுடன், வழிமுறைகளை வகுத்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். அதன்படி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை
பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியை சேர்ந்த பொது மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர், திப்பணம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இந்த நிலையில் மருதடியூரில் இருந்து பொட்டலூர் செல்லும் ரோட்டில் வெள்ளைய நாடானூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. மதுக்கடை அமைத்தால், மாணவ–மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதோடு, சட்டம்–ஒழுங்கும் பாதிக்கப்படும். எனவே வெள்ளைய நாடானூரில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மருத்துவ அணி செயலாளர் ஜமால், மாணவர் அணி செயலாளர் நயினார் ஆகியோர் கல்லூரி மாணவர்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில் ‘‘நெல்லை பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில், ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணம் செலுத்திய போதும், பல்வேறு கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கேட்டவர்களை மிரட்டுகின்றனர். எனவே அரசு இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாஞ்சோலை தொழிலாளர்கள்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், அம்பை அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை மற்றும் தேயிலை தோட்டத்துக்கு செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் மாஞ்சோலை உள்பட தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அவர்களுடைய குழந்தைகள், உறவினர்கள் குதிரைவெட்டியில் இருந்து நெல்லைக்கு செல்வதற்கு அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது அம்பையுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நேரடியாக நெல்லைக்கு செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மீண்டும் நெல்லை புதிய பஸ் நிலையம் வரை பஸ் போக்குவரத்தை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் ரவி தேவேந்திரன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லை டவுன் நயினார்குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆலங்குளம் பீடி தொழிலாளர் சங்க வட்டார தலைவர் மாரியப்பன் தலைமையில் கொடுத்த மனுவில், ‘‘ஆலங்குளம் பகுதியில் வீடு இல்லாத பீடி தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’’ என்று கேட்டு உள்ளனர்.
போராட்ட அனுமதி
விக்கிரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரம் சண்முகாநகரை சேர்ந்த துர்கா தேவி என்பவர் கொடுத்த மனுவில், ‘‘மீன்வளத்துறையில் மீன்வள உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகிற 10–ந்தேதி நெல்லையில் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர்.

Related Tags :
Next Story