மின்சார ரெயிலில் தொழில்நுட்ப கோளாறால் மெயின் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி
மின்சார ரெயிலில் தொழில்நுட்ப கோளாறால் மெயின் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் நேற்று மதியம் கல்யாண் நோக்கி ஸ்லோ மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் மதியம் 1.20 மணியளவில் மாட்டுங்கா ரெயில் நிலையத்தை வந்தடைந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் அந்த ரெயில் கிளம்பி செல்ல முடியாமல் ரெயில் நிலையத்திலேயே நின்றது.
பயணிகள் அவதி
தகவல் அறிந்து வந்த ரெயில்வே என்ஜினீயர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரெயிலுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து கல்யாண், பத்லாப்பூர், அம்பர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மற்ற ரெயில்கள் பைகுல்லா - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.
ரெயில்கள் தாமதம்
இந்த நிலையில், மின்சார ரெயிலில் ஏற்பட்டிருந்த கோளாறு முக்கால் மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டு அந்த ரெயில் அங்கிருந்து கிளம்பி சென்றது. இருப்பினும் அந்த ரெயில் குர்லா ரெயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குர்லாவில் இருந்து வேறு மின்சார ரெயிலில் சென்றனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக மதியம் ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.

Related Tags :
Next Story