பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர்: அ.தி.மு.க. சாதனை திட்டங்களில் ஒரு மைல்கல்


பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர்: அ.தி.மு.க. சாதனை திட்டங்களில் ஒரு மைல்கல்
x
தினத்தந்தி 5 July 2017 4:45 AM IST (Updated: 4 July 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர்: அ.தி.மு.க. சாதனை திட்டங்களில் ஒரு மைல்கல் முதல்–அமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ நன்றி

மதுரை,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முதன் முதலில் மதுரையில் நடத்தியதற்கும், மதுரை மாட்டுத் தாவணியில் உள்ள பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதற்கும், மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்திட ரூ.1,295 கோடியில் 158 கி.மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்ததற்கும், மதுரை மக்கள் சார்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த பேரவைத் தலைவர் மற்றும் பேரவை துணைத் தலைவர், அமைச்சர்கள், சட்டமன்ற–நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இன்றைக்கு ஜெயலலிதாவின் வழியில், சிறப்பான ஆட்சியை முன்னெடுத்துச் செல்லுகின்ற முதல்–அமைச்சர் தொடர்ந்து பல சாதனை திட்டங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில் மதுரைக்கு அறிவித்துள்ள இந்த குடிநீர் திட்டம் அ.தி.மு.க. சாதனை திட்டங்களில் ஒரு மைல்கல் ஆகும். எனது நன்றியினை மதுரை மக்கள் சார்பாக சட்டசபையிலும் பதிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story