நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழக மீனவர்கள் வலையில் இலங்கை படகு சிக்கியது


நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழக மீனவர்கள் வலையில் இலங்கை படகு சிக்கியது
x
தினத்தந்தி 5 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன் பிடித்தபோது தமிழக மீனவர்களின் வலையில் இலங்கை படகு சிக்கியது. இது கடத்தலுக்கு பயன்படும் படகா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ரொனால்டோ என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் 5 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவிற்கும்–தனுஷ்கோடிக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் வலையில் அதிக எடை கொண்ட ஒரு பொருள் சிக்கியது.

அதை அருகில் சென்று பார்த்தபோது, வலையில் பிளாஸ்டிக் படகு ஒன்று சிக்கியது தெரியவந்தது. அந்த படகை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், மத்திய–மாநில உளவுப்பிரிவு மற்றும் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த படகு இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்பதும், அதை அந்த நாட்டு மீனவர்கள் தான் பயன்படுத்துவார்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இலங்கை மீனவர்கள் யாரேனும் மீன் பிடிக்க வந்த போது கடல் கொந்தளிப்பால் படகு கடலில் மூழ்கியதா அல்லது கடத்தல்காரர்கள் யாரேனும் கடத்தல் பொருட்களுடன் வந்த போது, படகு கடலில் மூழ்கியதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் படகு சிக்கியதால், ரூ.2 லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story