பண்ருட்டியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டம்
பணி இடமாறுதல் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் பண்ருட்டியில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
பண்ருட்டி,
பண்ருட்டி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் 11 பேர் கடந்த மாதம் மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் 10 ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான உத்தரவை பெற்றுக்கொண்டு, அவர்கள் புதிதாக மாற்றப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர்ந்தனர். பணிமாற்றம் செய்யப்பட்டவர்களில் பூங்குணத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியையும் ஒருவர் ஆவார். இவர் விசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மாற்றப்பட்டு இருந்தார். ஆனால் இவர் மட்டும் விசூர் பள்ளிக்கு பணிமாறுதலாகி செல்லாமல், அவர் ஏற்கனவே பணிபுரிந்து வரும் பள்ளியிலேயே பணியாற்றி வருகிறார்.
அந்த ஆசிரியை பணிபுரிந்து வரும் பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்வதற்கான பணி விடுவிப்பு ஆணையை கல்வித்துறை அதிகாரிகள் இதுவரையில் அவருக்கு வழங்கவில்லை. இதனால் தான் அவர் அதேபள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
எனவே அவருக்கு உடனடியாக பணி விடுவிப்பு ஆணை வழங்கி விசூர் பள்ளியில் பணியாற்ற செய்ய வேண்டும், இல்லையெனில் பணிமாறுதலாகி சென்று இருக்கும் அந்த 10 ஆசிரியர்கள் மீண்டும், அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த வாரம், பண்ருட்டி திருவதிகையில் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அதற்கான உறுதி கடிதத்தையும் வழங்கினர். இதையேற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
ஆனால், இதுநாள் வரையில் அந்த ஆசிரியை பணி மாறுதலாகி செல்லவில்லை. இதனால் இந்த பணிமாற்றம் செய்யப்பட்ட நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது. எனவே தான் அவரை தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்ற அதிகாரிகள் அனுமதித்து வருகிறார்கள், அவரை உடனடியாக பணிமாற்றம் செய்ய வேண்டும், இல்லையெனில் அந்த 10 ஆசிரியர்களையும் அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியிலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இரவு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
விடிய, விடிய நடந்த இவர்களது போராட்டம் நேற்று காலையும் தொடர்ந்தது. அப்போது, கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் வழங்கிய உறுதி கடிதத்திற்கு மாலை அணிவித்து, போராட்டம் நடந்த பந்தலில் வைத்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் ஜீவானந்தம், ரஹீம், கிறிஸ்டோபர் மற்றும் நாராயணமூர்த்தி, சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களது போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரவில்லை. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூறுகையில், கோரிக்கை நிறைவேறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

Related Tags :
Next Story