குறுவட்ட பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்


குறுவட்ட பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 5 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் குறுவட்ட பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு 14, 17, 19 வயது பிரிவின் கீழ் கைப்பந்து, கால்பந்து, எறிபந்து, ஹேண்ட்பால் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் தனபாலன், சரவணன், ஸ்டான்லி, ரவி, அசோக், அன்பரசு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஒரே நேரத்தில் போட்டிகளை நடத்தினர்.


பின்னர் சிறப்பாக விளையாடிய அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட அணிகள் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் செய்திருந்தார். இதே போல் கால்பந்து, எறிபந்து, ஹேண்ட்பால், கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் குன்னம் குறுவட்ட மாணவர்களுக்கு வருகிற 6-ந்ே-தியும் (வியாழக்கிழமை), பெரம்பலூர் குறுவட்ட மாணவர் களுக்கு 7-ந்தேதியும் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story