லாரி கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 14 மீனவர்கள் படுகாயம்


லாரி கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 14 மீனவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 5 July 2017 4:30 AM IST (Updated: 5 July 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 14 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வேளாங்கண்ணி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சிலர் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விற்பனைக்காக மீன்கள் வாங்கிக்கொண்டு லாரியில் திருவாரூருக்கு சென்று கொண்டு இருந்தனர். லாரியை சின்னையன் என்பவர் ஓட்டினார். நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியின் முன்பக்கம் உள்ள இரும்பு கம்பி (ராடு) உடைந்தது. இதில் எதிர்பாராதவிதமாக லாரி சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் சென்ற திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தருமையன் மகன் குமார் (வயது 45), ஆதிச்சப்புரம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (47), கோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் முருகையன் (42), திரிசங்கு (47), ஆறுமுகம் (45), சக்திவேல் (37), மனோகரன் (47), அன்பழகன் (40), பாலசுப்பிரமணியன் (43), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பாண்டியன் (42), சேகர் (42), அறிவழகன் (40), விளக்குடியை சேர்ந்த மதியழகன் (45), டிரைவர் சின்னையன் ஆகிய 14 பேரும் படுகாயம் அடைந்தனர்.


படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குமார், இளங்கோவன் ஆகிய 2 பேரும் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றிசெல்லப்பட்ட மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தன. இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி கவிழ்ந்ததால் நாகை - திருத்துறைப்பூண்டி சாலையில் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story