பாக்குமூட்டைகளை கடத்திய வழக்கு: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது


பாக்குமூட்டைகளை கடத்திய வழக்கு: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

பாக்குமூட்டைகளை கடத்திய வழக்கு: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம்,

ஓமலூரை அடுத்துள்ள தளவாய்பட்டி ஏரிக்கரை அருகே கடந்த ஏப்ரல் மாதம் வாழப்பாடி சிங்கிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு பாக்கு மூட்டைகளை கடத்தி சென்ற லாரியை தீவட்டிப்பட்டி போலீசார் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரியில் பாக்கு மூட்டைகளை கடத்தியதாக சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்த வீராசாமி(வயது 28) உள்பட பலரை பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் வீராசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் சேலம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து வீராசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சம்பத் நேற்று உத்தரவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான இளங்கோ, மணி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story