குண்டும், குழியுமான சாலையில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி அண்ணன் படுகாயம்


குண்டும், குழியுமான சாலையில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி அண்ணன் படுகாயம்
x
தினத்தந்தி 5 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமான சாலையில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.

தானே,

குண்டும், குழியுமான சாலையில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.

குண்டும், குழியுமான சாலை

தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்தவர் சங்கர் அகுஜா (வயது52). இவரது மகன்கள் அமித், ராகுல் (வயது18). இருவரும் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் தானே நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ராகுல் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். அமித் பின்னால் அமர்ந்து இருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

மோட்டார்சைக்கிள் பிவண்டி மங்கோலிநாக்கா பகுதியில் வந்த போது சாலை குண்டும், குழியுமாக இருந்து உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக ராகுல் மோட்டார்சைக்கிளை இடதுபுறமாக திருப்பி உள்ளார்.

அப்போது எதிரே லாரி ஒன்று வருவதை கவனித்த அவர் உடனே வலது பக்கமாக திருப்பினார்.

வாலிபர் பலி

அப்போது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியடி கவிழ்ந்தது. இதில் அண்ணன், தம்பி இருவரும் கீழே விழுந்தனர்.

சாலையில் உள்ள கல் மீது ராகுலின் தலைமோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அமித் சாலை தடுப்புச்சுவரில் விழுந்தார். இதில் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். அமித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து நார்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story