எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தின் பெயர் ‘பிரபாதேவி’ என பெயர் மாற்றம் மேற்கு ரெயில்வே அறிவிப்பு


எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தின் பெயர் ‘பிரபாதேவி’ என பெயர் மாற்றம் மேற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 5 July 2017 4:03 AM IST (Updated: 5 July 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பெரும்பாலான புறநகர் ரெயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது வைக்கப்பட்டவை ஆகும்.

மும்பை,

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பெரும்பாலான புறநகர் ரெயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது வைக்கப்பட்டவை ஆகும். தற்போது இந்த பெயர்கள் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக விக்டோரியா முனையம் மும்பை சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில்,

டிசம்பர் மாதம் நடந்த மராட்டிய குளிர்கால கூட்டத்தொடரின் போது, மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தை (சி.எஸ்.டி.) சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் எனவும், எல்பின்ஸ்டன்ரோடு ரெயில் நிலையத்தை பிரபாதேவி எனவும் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மத்திய ரெயில்வே மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் என அண்மையில் பெயர் மாற்றம் செய்தது.

இந்த நிலையில், மேற்கு ரெயில்வே தனது வழித்தடத்தில் உள்ள எல்பின்ஸ்ரோடு ரெயில் நிலையத்தின் பெயரை பிரபாதேவி என நேற்று பெயர் மாற்றம் செய்து அறிவித்தது.


Next Story