காஞ்சீபுரம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
காஞ்சீபுரம் அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாவூரில் மதுக்கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மதுக்கடையை அகற்றக்கோரி காஞ்சீபுரம்- வையாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
இங்கு மதுக்கடை அமைந்துள்ளதால் எங்களால் கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மாலை வேளைகளில் மது பிரியர்களால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
சமரச பேச்சுவார்த்தை
அந்த வழியாக செல்லும் பெண்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுக்கடையை அகற்றுவது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story