செல்லப்பிராணிகளுக்கு உணவு அளிக்க...!


செல்லப்பிராணிகளுக்கு உணவு அளிக்க...!
x
தினத்தந்தி 5 July 2017 8:15 PM IST (Updated: 5 July 2017 3:05 PM IST)
t-max-icont-min-icon

செல்லப்பிராணிகளும், செல்லக் குழந்தைகள்போலத்தான், நாம் இல்லாவிட்டால் சிலநேரங்களில் சாப்பிடாமல் அடம்பிடிக்கும். வேலையில் இருக்கும்போது,

 அங்கிருந்தே வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளுக்கு உணவு அளிக்க வசதியாக வந்துள்ளது பார்போ டிஸ்பென்சர் கருவி. கேமரா மற்றும் ஸ்பீக்கர் இணைப்புள்ள இந்த கருவியின் மூலம் செல்லப்பிராணியின் நடவடிக்கையை கண்காணிக்கவும், கட்டளை கொடுத்து இயக்கவும் முடியும்.

 மேலும் உணவு உருண்டைகளை வினியோகிக்கும் துளையும் உள்ளது. இதற்கான அப்ளிகேசன் உதவியுடன் குறித்த நேரத்தில் செல்போன் வழியே கட்டளை கொடுத்தால் உணவு உருண்டைகளை வெளித்தள்ளி செல்லப்பிராணிகளை பசியாற்றுகிறது. சிறிது பயிற்சி அளித்தாலே செல்லப் பிராணிகள் இந்த கருவியுடன் பழகிவிடும் வகையில் எளிமையானது.


Next Story