விஞ்ஞான துளிகள்
இன்டர்நெட் டிரோன் : இன்டர்நெட் இணைப்பு சரியாக கிடைக்காத பகுதிகளை இணைய உலகுடன் இணைக்க, பேஸ்புக் நிறுவனம் அதி நவீன டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் தொடக்கமாக முதல் டிரோன் அரிசோனா பாலைவனப் பகுதியில் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு உள்ளது. இந்த திட்டதிற்கு பயன்படும் டிரோன்கள் ‘அக்குலியா’ எனப்படுகிறது. 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி இது இன்டர்நெட் இணைப்பு வழங்கும். ஒரு விமானம் 90 நாட்கள் ஆகாயத்தில் மிதந்தபடி 60 மைல் பரப்பளவுக்கு இன்டர்நெட் சேவை வழங்கவல்லது. தனக்குத் தேவையான ஆற்றலை சூரியசக்தியில் இருந்து பெற்றுக்கொள்ளும்.
இதய பாதுகாப்பு அப்ளிகேசன்: ஐரோப்பிய இதய நல அமைப்பான இ.எச்.ஆர்.எ. அமைப்பு, இதய பாதிப்பு உடையவர்களுக்காக ‘பர்ஸ்ட் ரெஸ்பாண்டர்’ எனும் புதிய அப்ளிகேசனை உருவாக்கி உள்ளது. இதய செயலிழப்பு எனப்படும் கார்டியாக் அரஸ்ட் பாதிப்பு உடையவர்கள், இந்த அப்ளிகேசனில் தங்கள் பெயரை பதிவு செய்து வைத்துக் கொண்டால் அவர்களுக்குத் தேவையான முதலுதவி துரிதமாக கிடைக்க உதவி செய்யப்படும்.
இதற்கான முதலுதவி பயிற்சி பெற்றவர்களின் உதவியோடு ஆங்காங்கே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜெர்மனியில் இதற்கான பரிசோதனை முயற்சிகள் நடந்தது. 35 சதவீத நோயாளிகளை இந்த அப்ளிகேசன் உதவியுடன் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். ஜெர்மன் அரசாங்கம் இந்த அப்ளிகேசனை பயன்படுத்த ஊக்கம் அளிக்கிறது. தன்னார்வ தொண்டர்களையும் இதற்கான முதலுதவி பயிற்சி பெற கூறி உள்ளனர்.
ரான்சம்வேரின் மூலம் : ஐரோப்பிய யூனியனில் சமீப காலமாக நடந்த ரான்சம்வேர் தாக்குதல் எனப்படும் வைரஸ் பிரச்சினைகளுக்கு காரணமான நிறுவனம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஜானஸ் சைபர்கிரைம் சொல்யூசன்ஸ்’ என்ற பெயரில் செயல்பட்ட நிறுவனம் ரான்சம்வேர் வைரஸ்களை உருவாக்கி பரப்பியதாக ரஷியாவின் சைபர் குற்றத்தடுப்பு ஆய்வு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை ஆய்வகம் கண்டறிந்து உள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் ரான்சம்வேர் பிரச்சினை மீண்டும் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது.

Related Tags :
Next Story