ஞாபக மறதி மூளைக்கு நல்லது
மனிதனுடைய ஞாபகங்கள் மிகவும் சுவாரசியமானவை. உதாரணமாக, ஒவ்வொரு மனிதனுடைய முதல் ஞாபகம் தன் தாயின் வயிற்றில் 20 வார சிசுவாக இருக்கும்போது உருவாகிறது.
ஞாபகங்களில் குறுகிய கால ஞாபகம் மற்றும் நீண்ட கால ஞாபகம் என்று இருவகைகள் உண்டு. இதில் குறுகிய கால ஞாபகம் எவ்வளவு நேரம் இருக்கும் தெரியுமா? வெறும் 20 முதல் 30 நொடிகள் வரைதான். மனித மூளையின் ஞாபகக் கொள்ளளவுக்கு எல்லையே இல்லை என்கிறது அறிவியல்.
நமது மூளையில் ஒவ்வொரு ஞாபகமும் மூன்று விதமான வினைகளால் உருவாக்கப்படுகிறது. முதல் வினை ‘என்கோடிங்’ (Encoding) எனப்படுகிறது.
அதாவது, நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள நினைக்கும் ஒரு தகவலை மூளையில் பதிவு செய்வது. இரண்டாவதாக, பதிவு செய்த தகவல்களை ‘ஒன்றுதிரட்டுதல்’ அல்லது ‘ஒருங்கிணைத்தல்’ (Consolidation). மூன்றாவது மற்றும் இறுதியாக, ஒருங்கிணைத்த தகவல்களை தேவையான நேரத்தில் ‘மீட்டெடுத்தல்’ (Retrieval). இப்படி ஞாபகங்களை உருவாக்கும் திறனை வலுவாக்க ஒழுக்கமான உறக்க பழக்கம், சரிவிகித ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி ஆகிய மூன்றும் அவசியம் என்கின்றன இதுவரையிலான ஆய்வுகள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஞாபகங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கினாலும் முக்கியமான சில தருணங்களில் அவற்றை மறந்துவிட்டு நாம் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு. முக்கியமாக, இதுவரை ஞாபக மறதியானது மூளையில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது சிதைவுகளின் ஒரு அறிகுறியாகவே பெரும்பாலும் கருதப்பட்டு வந்தது. ஆனால், உலகில் முதல் முறையாக, ஞாபக மறதியானது நம் மூளையின் செயல்பாட்டுக்கும், நம் வாழ்க்கைக்கும் கூட அவசியம் என்று ஆச்சரியப்படுத்துகிறது கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று.
‘மனித மூளையானது ஒரு ஞாபகத்தை மறப்பதற்காக அல்லது ஞாபக மறதி ஏற்படுவதற்காக வேண்டுமென்றே உழைக்கிறது’ எனும் வினோதமான கருதுகோள் ஒன்றை முன்வைக்கும் ஆய்வாளர் ப்ளேக் ரிச்சர்ட்ஸ் அதற்கான அறிவியல் காரணத்தையும் பின்வருமாறு விளக்குகிறார்.
பொதுவாக, அளவுக்கு அதிகமான தகவல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது மனித மூளை. ஆனால் மனிதனுடைய தினசரி வாழ்க்கைக்கு தொடர்பற்ற அல்லது அவசியமில்லாத சில ஞாபகங்கள், நம் தகவல் சேமிப்பு திறனுக்கு பெரும்பாலான சமயங்களில் தடையாக நிற்கின்றன.
முக்கியமாக, இந்த வகை ஞாபகங்கள் தொடர்பற்றவையாக மட்டுமல்லாமல், சில சமயங்களில் மனித வாழ்க்கைக்கே ஆபத்தானவையாகக் கூட மாறலாம். மேலும், நம் வாழ்க்கைக்கான சரியான முடிவுகளை எடுக்க மற்றும் இந்த உலகத்தில் புத்திசாலித்தனமாக இயங்க, நம் ஞாபகங்கள்தான் நமக்கு துணை புரிகின்றன என்கிறார் ஆய்வாளர் ரிச்சர்ட்ஸ்.
அதுமட்டுமல்லாமல், சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் உயிரினங்களையே பரிணாமம் தேர்ந்தெடுக்கும். அத்தகைய உயிரினங்களே தொடர்ந்து இந்த உலகில் வாழும். இத்தகைய பல காரணங்களாலேயே, மனித மூளையானது மெனக்கெட்டு சில ஞாபகங்களை மறக்கிறது என்கிறது இந்த புதிய ஆய்வின் முடிவுகள்.
முக்கியமாக, ஞாபகத் திறன் மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றின் மீதான ரிச்சர்ட்ஸ் நடத்திய பெரும்பாலான ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கும் திறனை பாதிக்கும் அளவுக்கு, ‘அளவுக்கு அதிகமான தகவல்களை சேகரிக்கும் பண்பை’ செயற்கை நுண்ணறிவுத் துறையில் ‘ஓவர் பிட்டிங்’ (over fitting) என்கிறார்கள். மேலும், மனிதனுக்கு நிகராக செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி உருவாக்கத்தில் முக்கியமான பகுதியே அதன் ஞாபகத் திறன் உருவாக்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், ஞாபக மறதி குறைபாடுகளான அல்செய்மர்ஸ் போன்றவை காரணமாக ஏற்படும் ஞாபக மறதி தவிர்த்து பார்த்தால், ஓரளவுக்கு ஞாபகம் கொண்ட மூளையே ஆரோக்கியமான மூளை எனும் வினோதமான கருதுகோள் ஒன்றை அழுத்தமாக முன்வைக்கிறது இந்த புதிய ஆய்வு.

Related Tags :
Next Story