நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை


நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 11:59 PM IST)
t-max-icont-min-icon

நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

கோவில்பட்டி,

கோவில்பட்டி 5–வது வார்டு சங்கரலிங்கபுரத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலாக தெருக்குழாய்களை அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். முன்னாள் ராணுவ வீரர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகரசபை ஆணையாளர் முருகேசன் அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். எனவே முற்றுகையிட்டவர்களிடம் நகரமைப்பு அதிகாரி காஜாமைதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story