பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக விவேகானந்தா படகு ரூ.17½ லட்சத்தில் சீரமைப்பு
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக விவேகானந்தா படகு ரூ.17½ லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இதனை சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம், பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளை இயக்கி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இந்த படகு போக்குவரத்து நடக்கிறது.
இந்த நிலையில் விவேகானந்தா படகு கடலில் இயங்குவதற்கான கால அவகாசம் இந்த மாத இறுதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த படகை கரைக்கு கொண்டு வந்து சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்த படகு கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ரூ. 17லட்சத்து 60 ஆயிரம் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணியை வருகிற ஆகஸ்டு மாதம் 15–ந்தேதிக்குள் முடிக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த படகின் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஓணம் பண்டிகை விடுமுறைக்கு இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் கழகம் அறிவித்துள்ளது.

Related Tags :
Next Story