முறைகேடான குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும்
முறைகேடான குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நிலவும் வறட்சி தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் குறித்தும் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பணிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில் பழுது நீக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க வேண்டும்.
மேலும் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட விருத்தாசலம், நல்லூர் மற்றும் மங்களூர் ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து முறைகேடாக குடிநீர் இணைப்புகளை எடுத்து வருபவர்களை கண்டறிந்து, அவர்களது இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும்.
குடிநீர் குழாய்களில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். மின் மோட்டார்களை போலீசார் துணையுடன் பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன், கடலூர், விருத்தாசலம் மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story