அணையில் தண்ணீர் இல்லை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதியாக குறைந்தது
கடும் வறட்சி, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பாதியாக குறைந்துள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) அழைக்கப்படுகிறது. இதனை காவிரி டெல்டா மாவட்டங்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இங்கு குறுவை, சம்பா-தாளடி, கோடைநெல் சாகுபடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்குப்பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடாததாலும், மேட்டூர் அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி வழக்கமாக 2 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் முதல் 3 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு வட கிழக்குப்பருவமழை அதிக அளவு பெய்தது. ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால் 2 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கரில் தான் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது கடும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தில் சென்று விட்டது. இருப்பினும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி காவிரி டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரை அதாவது வழக்கமாக நடைபெறும் பரப்பளவில் இருந்து பாதியளவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது 1 லட்சத்து 14 ஆயிரம் எக்டேர் வரை சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
இன்னும் 36 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நாற்றங்காலும் தயார் செய்யப்பட்டு நடவுப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தற்போது காவிரி ஆறு பாசன பகுதிகளையொட்டி தான் தற்போது குறுவை சாகுபடி பணிகள் அதிக அளவில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “தற்போது நிலத்தடி நீர் மட்டம் ஆற்றங்கரையையொட்டி உள்ள பகுதிகளில் கூட 300 அடிக்கும் கீழே சென்று விட்டது. குறுவை நடவுப்பணிகள் பெரும்பாலும் ஜூலை மாத இறுதிக்குள் முடிவடையும். தற்போது தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணைக்கு இன்னும் தண்ணீர் எதிர்பார்த்த அளவு வரவில்லை. இதனால் தற்போது வழக்கமாக குறுவை சாகுபடி நடைபெறும் பரப்பளவை விட பாதி அளவு தான் மேற்கொள்ளப்படுகிறது. இதுவும் முற்றிலும் ஆழ்குழாய் கிணறு பாசன வசதிகளை கொண்ட இடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

Related Tags :
Next Story