ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
திருமருகல் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த காலனித்தெரு, ஆற்றங்கரைத்தெரு, வெள்ளபாக்கம், சன்னியாசி பனங்குடி, பண்டகசாலை ஆகிய கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து திட்டச்சேரி - குத்தாலம் சாலை கோபுராஜபுரத்தில் கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், குத்தாலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கடந்த மார்ச் 10-ந்தேதி பூமி பூஜை போட்ட நிலையில், பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே உடனே 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் கழிவறை கட்டித்தர வேண்டும்.
ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும். சாலை வசதிகள் செய்து தர வேண்டும். குத்தாலம் ஊராட்சியில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை செய்து தர வேண்டும். கிராம மைய பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். சாலை ஓரங்களில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.
குத்தாலம் ஊராட்சியில் உள்ள படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன துணை பொது மேலாளர் ராமசாமி, நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, கங்களாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் சந்திரகலா, கிராம நிர்வாக அலுவலர் உமா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதைதொடர்ந்து வருகிற 8-ந்தேதி நாகை தாலுகா அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story