பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் தவறு இல்லை தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி


பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் தவறு இல்லை தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2017 4:00 AM IST (Updated: 6 July 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் தவறு ஏதும் இடம்பெறவில்லை என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் தவறு ஏதும் இடம்பெறவில்லை என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி

மராட்டியத்தில் ரூ.34 ஆயிரம் கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலை மாவட்ட வாரியாக சமீபத்தில் அவர் வெளியிட்டார். அதில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 813 பெயர் இடம்பெற்றிருந்தது.

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் குறைந்த அளவே விவசாய நிலம் இருப்பதால், பல்வேறு கேள்வி கணைகளுக்கு இது வித்திட்டது. அத்துடன், இதுபற்றி ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். இதன் காரணமாக விவசாயிகளின் உணர்வுகளுடன் அரசு விளையாடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

பட்னாவிஸ் பேட்டி

இந்த நிலையில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பயிர்க்கடன் பெற தகுதிபடைத்த விவசாயிகளின் பெயர் பட்டியலில் எந்தவொரு தவறும் இடம்பெறவில்லை. பயனாளிகளின் பெயர் விவரங்களை நாங்கள் விரைவில் வெளியிடுவோம். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது’’ என்றார்.

இதனிடையே, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் வலியுறுத்தினார்.


Next Story