பால்கர் அருகே, வயலில் அறுந்து விழுந்த மின்கம்பி விவசாயியின் உயிரை பறித்தது உழவில் ஈடுபட்டிருந்த காளைமாடும் செத்த பரிதாபம்
பால்கர் அருகே, வயலில் அறுந்து விழுந்த மின்கம்பி விவசாயியின் உயிரை பறித்தது. உழவில் ஈடுபட்டிருந்த அவரது காளைமாடும் பரிதாபமாக செத்தது.
வசாய்,
பால்கர் அருகே, வயலில் அறுந்து விழுந்த மின்கம்பி விவசாயியின் உயிரை பறித்தது. உழவில் ஈடுபட்டிருந்த அவரது காளைமாடும் பரிதாபமாக செத்தது.
மின்கம்பி அறுந்து விழுந்ததுபால்கர் மாவட்டம் வாடா தாலுகாவில் உள்ள சாப்னே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜிபார் தங்கர் (வயது53). தற்போது பருவமழை பெய்து வருவதை அடுத்து அங்குள்ள தனது வயலில் வேளாண் பணிகளை தொடங்கினார். நாற்று நடுவதற்காக நேற்றுமுன்தினம் தனது காளைமாடுகளை கொண்டு வயலை உழுது கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மேலே செல்லும் உயர்அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து ஜிபார் தங்கர் மீதும், உழவில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த ஒரு காளை மாட்டின் மீதும் விழுந்தது.
விவசாயி சாவுஇதில், ஜிபார் தங்கர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து காளை மாடும் செத்து போனது. அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜிபார் தங்கரின் மகள் மின்சாரம் பாய்ந்து தந்தை பலியானதை பார்த்து கதறி அழுதார்.
தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து மின்கம்பி அகற்றப்பட்டு ஜிபார் தங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மின்வாரியம் சார்பில் இழப்பீடாக ஜிபார் தங்கரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல நேற்றுமுன்தினம் மாலை மனோர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து 6 எருமை மாடுகள் செத்தன.