ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மும்பை மாநகராட்சிக்கு ரூ.647 கோடி மராட்டிய அரசு வழங்கியது
ஜி.எஸ்.டி. அமலானதால் ஒரு மாதத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மாநில அரசு மும்பை மாநகராட்சிக்கு ரூ.647 கோடி வழங்கியது.
மும்பை,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
ஆக்ட்ராய் வரி ஒழிந்தது
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததால் மும்பை மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டி தந்த ஆக்ட்ராய் வரி வசூலிப்பு முறை முடிவுக்கு வந்தது. ஆக்ட்ராய் வரி மூலம் மும்பை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைத்து வந்தது.
எனவே இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடாக வழங்கப்படும் என மாநில அரசு மும்பை மாநகராட்சிக்கு உறுதி அளித்து இருந்தது.
ரூ.647 கோடியே 34 லட்சம்
இதையடுத்து மாநில அரசு, மும்பை மாநகராட்சிக்கு ரூ.647 கோடியே 34 லட்சத்தை இழப்பீடாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மும்பை சி.எஸ்.டி.யில் மாநகராட்சி தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநில நிதிமந்திரி சுதீர் முங்கண்டிவார் இழப்பீடு தொகைக்கான காசோலையை சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே முன்னிலையில் மும்பை மாநகராட்சி மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், கமிஷனர் அஜாய் மேத்தா ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரிகள் சுபாஷ் தேசாய், திவாகர் ராவ்தே, ராம்தாஸ்கதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல இனிமேல் மாதந்தோறும் மாநில அரசு மாநகராட்சியிடம் இழப்பீடு தொகையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோதலால் பரபரப்பு
இதற்கிடையே மாநகராட்சிக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில், பா.ஜனதா மற்றும் சிவசேனாவை சேர்ந்த கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற மாநகராட்சி பொதுக்குழு கூட்ட அரங்கிற்குள் பா.ஜனதா கவுன்சிலர்களை உள்ளே செல்லவிடாமல் சிவசேனா கட்சியினர் தடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் இருகட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 2 கட்சியினரும் ஒருவரை ஒருவர் அவதூதாறாக பேசி கோஷம் எழுப்பினர்.
இந்தநிலையில் உத்தவ்தாக்கரே நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது பா.ஜனதா கட்சியினர் அரங்கத்தைவிட்டு வெளியேறி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்கிடையே அரங்கத்திற்கு வெளியேயும் 2 கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. இதனையடுத்து மாநகராட்சி காவலர்கள் இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story