அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம், மாவட்ட வருவாய் துறை சங்கம் ஆகியவற்றின் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
கரூர்,
கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம், மாவட்ட வருவாய் துறை சங்கம் ஆகியவற்றின் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வருவாய் துறை சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை சங்க நிர்வாகிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story