தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்


தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 7 July 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்

பந்தலூர்,

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்ததால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.


பந்தலூர், அட்டி, மேங்கோரேஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் தினமும் ஒரு காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் இதை கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


தொடர்ந்து வனச்சரகர்கள் சரவணன், மனோகரன், வன காப்பாளர் லூயிஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை வனத்துறையினரை துரத்தியது. பின்னர் அவர்கள் பட்டாசு வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.

அதன் பின்னரே தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டு யானை அந்த பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளதாக அவர்கள் பீதியுடன் தெரிவித்தனர். இதையொட்டி வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Tags :
Next Story