எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை,

எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கக்கோரி மதுரை பெட்கிராட் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெட்கிராட் தலைவர் சுருளி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் சுப்புராம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். பொருளாளர் சுசீலா குணசீலி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு மத்திய அரசிற்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டத்தை தஞ்சாவூருக்கு மாற்ற கூடாது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் பகுதி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார். 

Next Story