மாணவ-மாணவிகளை அடித்த அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
பாடாலூரில் மாணவ-மாணவிகளை அடித்த அரசு பள்ளி ஆசிரியரை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 432 மாணவர்களும், 476 மாணவிகளும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கணினி ஆசிரியராக திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா தாளக்குடி கிராமத்தை சேர்ந்த மணிசேகரன் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது மாணவ-மாணவிகளை தேர்வு எழுதுமாறு கூறினார். ஆனால் அவர்கள் தேர்வு எழுதாமல் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் மணிசேகரன், வகுப்பில் இருந்த மாணவிகள் கிருஷ்ணவேணி, ஜெனீஸ்ரோஸ், மகாலட்சுமி, மாணவர்கள் கிஷோர், வெங்கடேஷ் உள்பட 40 பேரை மூங்கில் குச்சியால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் கிருஷ்ணவேணி என்ற மாணவிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக மாணவியை ஆசிரியர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு காயம் ஏற்பட்ட கையில் கட்டு போடப்பட்டது. பின்னர் அந்த மாணவி பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். ஆசிரியர் தாக்கியதில் மற்ற மாணவ-மாணவிகளுக்கு கை, வயிறு, நெஞ்சு ஆகிய பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிய உணவு இடைவேளையின் போது, மாணவ-மாணவிகள் தங்களின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன் தம்பிராஜன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து மணிசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவர்களை தேர்வு எழுதுமாறு கூறியதாகவும், ஆனால் அவர்கள் பேசி கொண்டிருந்ததால் அடித்ததாகவும் கூறினார். இதனையடுத்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி அருள்மொழிதேவி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
பின்னர் உடனடியாக ஆசிரியர் மணிசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story