செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட மேஸ்திரி தற்கொலை மிரட்டல்
அதியமான்கோட்டையில் மனைவி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட மேஸ்திரி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
நல்லம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தளப்பள்ளி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 27), கட்டிட மேஸ்திரி. தர்மபுரி அருகே உள்ள பிடமனோரி பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (22). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் 2 பேரும் பிடமனேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
கட்டிட மேஸ்திரியான கோவிந்தராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜோதி மீனா தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை மிரட்டல்
இந்தநிலையில் தனது மனைவி ஜோதி மீனா சாவுக்கு அவளுடைய அக்காள் கணவர் தான் காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை கோவிந்தராஜ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கோவிந்தராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜோதிமீனா தற்கொலைக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கோவிந்தராஜ் செல்போன் கோபுரத்தின் மீது இருந்து கீழே இறங்கினார். இந்த வழக்கு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்று வருவதால் கோவிந்தராஜை போலீசார் அங்கு அனுப்பி வைத்தனர். செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட மேஸ்திரி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story