இளம்பெண் கொலை வழக்கில் காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்

பென்னாகரம் அருகே இளம்பெண் கொலை வழக்கில் காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள செல்மாரம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் தமிழா (வயது18), இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் பாறை மீது இளம்பெண் தமிழா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்று தங்கராஜ் பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அதேபகுதியை சேர்ந்த வாலிபர் மகேந்திரன் (24) என்பவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
லேப்டெக்னீசியன் படித்து வந்த நானும், தமிழாவும் காதலித்து வந்தோம். கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்த தமிழாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாக தகவல் கிடைத்தது.இதனால் தமிழாவுக்கு போன் செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு வரவழைத்தேன். அப்போது வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக கேட்ட போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் தமிழாவின் கையை கட்டி போட்டு கொல்ல முயன்றேன்.
இதில் அவள் மயங்கி விட்டாதால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் சாவில் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவளுடைய வாயில் விஷத்தை ஊற்றி விட்டு சென்று விட்டேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர் என்று மகேந்திரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இளம்பெண் கொலை வழக்கில் வாலிபர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story