இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்
இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட 6 விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி மற்றும் சமூக பொது நல இயக்கங்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக பொது நல இயக்கங்கள் சார்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஷாநவாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்கர் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி நாராயணன் மற்றும் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 30-ந் தேதி குந்தாரப்பள்ளி சந்தையில் இருந்து விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் பால் வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்லும் போது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். மத்திய பா.ஜனதா அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசின் உத்தரவிற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளது.
6 விவசாயிகள்
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் தடையை மீறி 61 மாடுகளை பறிமுதல் செய்து, அவற்றை இறைச்சிக்காக கொண்டு சென்றதாக கூறி 6 விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம். அந்த மாடுகளை வியாபாரிகளிடம் ஒப்படைக்காமல் கோ சாலைக்கு சட்டத்திற்கு புறம்பாக அனுப்பி உள்ளனர்.
இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, 6 விவசாயிகளையும், வியாபாரிகளையும் விடுதலை செய்து, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மேலும் கோ சாலைக்கு அனுப்பப்பட்ட 61 மாடுகளையும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளர் நூர்முகமது, திராவிடர் கழக நிர்வாகி திராவிட மணி, ஜமாத் உல்மா இந் மாவட்ட தலைவர் அல்தாப் அகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது சுகேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story