மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை


மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 7 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

கீழமூவர்க்கரை மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு, மீனவர் சமுதாய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாகப்பட்டினம்,

சீர்காழி வட்டம் கீழமூவர்க்கரை மீனவர் சமுதாய கூட்டமைப்பினர், நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த நாங்கள் மண்எண்ணெய்யால் இயங்கும் வெளிபொருத்தும் எந்திரம் மூலம் பைபர் படகுகளை வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். நாங்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு முக்கிய தேவையான மண்எண்ணெய் மானிய விலையில் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து நாகை மீன்துறை இணை இயக்குனர், சென்னை மீன்துறை ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் சமுதாய மக்களிடம், அவர்களது பயன்பாட்டிற்காக உள்ள மண்எண்ணெய்யை வாங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.


எனவே கீழமூவர்க்கரை மீனவர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ், கடல் மீனவ கூட்டுறவு சங்கம் மூலம் மானிய விலையில் மண்எண்ணெய் உடனே வழங்க நடவடிக்கை எடுத்து எங்களது மீன்பிடி தொழிலை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story