டாடா நிதி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் துக்குப்போட்டு தற்கொலை


டாடா நிதி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் துக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2017 9:55 PM GMT (Updated: 2017-07-07T03:25:01+05:30)

டாடா நிதி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

டாடா நிதி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் தொங்கினார்

டாடா நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் திலீப் சுதாகர் பென்சே(வயது 61). இவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2001–ம் ஆண்டு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் நிதி ஆலோசகராக செயல்பட்டு வந்தார். தற்போது இவர், தாதர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது 2–வது மனைவியுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை இவர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி கீழே வந்து பார்த்தார். அப்போது திலீப் சுதாகர் பென்சே அலுவலகத்தில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.

கடிதம் சிக்கியது

இது குறித்து மாட்டுங்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்து திலீப் சுதாகர் பென்சே எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளார்.


Next Story